-->
Breaking News
Loading...

இந்து வாரிசுரிமை

இந்து சட்டத்தின்படி, சொத்துக்களை சுய சம்பாத்ய சொத்து (Self Acquired Property) மற்றும் மூதாதையர் சொத்து (Ancestral property) என இருவகையாக பிரிக்கலாம். 

சுய சம்பாத்ய சொத்து
---------------------------------------- 
ஒரு இந்து ஆண், தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானலும் எழுதி கொடுக்கலாம். அதில் வாரிசுகள் உரிமை கோர முடியாது. சொத்துக்களை யாருக்கும் பிரித்து கொடுக்காமல் மற்றும் உயில் எழுதாமல் இறந்து விட்டால் சொத்தானது, மனைவி, தாய், மகன்கள், மகள்கள், ஏற்கனவே இறந்து போன மகனின் மனைவி- குழந்தைகள், ஏற்கனவே இறந்து போன மகளின் குழந்தைகளுக்கு போய் சேரும்.
------
ஒரு இந்து பெண்ணுக்கு கிடைக்கும் சொத்து முழு உரிமைச் சொத்தாகவே (Absolute Property) கருதப்படும். இதனை அப்பெண் தன் வாழ்நாளில் யாருக்கு வேண்டுமானலும் எழுதி கொடுக்கலாம். அதில் வாரிசுகள் உரிமை கோர முடியாது. 

உயில் எழுதாமல் இறந்து விட்டால், அவரது இறப்பிற்குப்பின் சொத்தானது மகன், மகள், கணவர், ஏற்கனவே இறந்த மகளின்/மகனின் குழந்தைகளுக்கு போய் சேரும். 

மகன் மற்றும் மகள் இல்லையெனில் , கணவரிடமிருந்து வந்த சொத்து எனில் கணவரின் வாரிசுகளுக்கும் (கணவரின் தந்தை, கணவரின் சகோதரர்கள் etc) , தாய்/ தந்தையிடமிருந்து வந்த சொத்து எனில் தந்தையின் வாரிசுகளுக்கும் (அப்பெண்ணின் சகோதரர்கள் மற்றும் தாய்க்கு) போய் சேரும். 

மூதாதையர் சொத்து
-----------------------------------
4 தலைமுறைகளாக பிரிக்கப்படாததே மூதாதையர் சொத்து. இச்சொத்தில், அடுத்த 3 தலைமுறை ஆண் - பெண் பிறப்பினாலயே சம உரிமை கோர முடியும். அதாவது, ஒருவர் தனது தந்தைவழி மூதாதையரிடமிருந்து சொத்துக்களைப் பெற்றால், அவருக்குக் கீழ் மூன்று தலைமுறை வரை அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தச் சொத்தில் சம உரிமை பெறுவார்கள். 

2005 இந்து வாரிசுரிமை சட்டத்திருத்தத்திற்கு முன்பு, பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு கிடையாது. இருப்பினும் சட்டத்திருத்தத்திற்குப்பின் மூதாதையர் சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் பிறப்பிலயே சம உரிமை பெறுகின்றனர். மேலும் இச்சட்டத்திருத்த்தின்படி, மகளின் திருமண நிலை மூதாதையர் சொத்தில் வாரிசாக பெறும் உரிமையை பாதிக்காது. மகனைப்போலவே திருமணத்திற்குப்பின்பு மகளும் பங்குரிமையராகவே(Coparcener) இருப்பார். 

இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்னால் (20 December 2004) ஏற்கனவே பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தில் பெண்கள் உரிமை கோர முடியாது. 

தாய்வழியாக பெறப்படும் சொத்துகள் மூதாதையர் சொத்து ஆகாது. 

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தாது.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU