-->
Breaking News
Loading...

தண்ணீர் பாட்டில் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

காற்று மாசுபாடு குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது, `என்விரான்மென்டல் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி' (Environmental Science and Technology) எனும் பத்திரிகை நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது, பிளாஸ்டிக் பொருள்கள், காற்றை எந்தளவுக்கு மாசுபடுத்துகின்றன என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில். பாட்டில் தண்ணீரை தொடர்ச்சியாக அருந்துபவர்கள் ஓர் ஆண்டில் மட்டும் 90,000 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்கலாம், அடுத்தகட்ட ஆய்வில் அவை தெளிவாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படியாக இருந்தாலும், காற்று மாசுபாட்டுக்குச் சுற்றுச்சூழல் மட்டுமன்றி உணவு, உடை, இருப்பிடம் எனப் பல வகையான காரணங்கள் இருப்பது இதன்மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- விகடன்

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU