நீங்கள் வாங்கும் மனை நகர்புற நில உச்சவரம்பு சட்ட நிலமா அதை பற்றி தெரிந்து இருக்க வேண்டிய 18 விஷயங்கள்……
===============================================
1. நில உரிமை காரணமாக தமிழத்தில் நிலவும்பல பொருளாதார ஏற்ற தாழ்வுகளை போக்கவும். நகர்புறத்தில் அதிக மனைகளை (அ) நிலங்களை யாரும் ஒரு தனி நபர் கைப்பற்றில் வைக்க கூடாது என்ற நோக்கில் 1976 ல் மத்திய அரசும், 1978ல் தமிழ்நாடு அரசும் இச் சட்டத்தை கொண்டு வந்தது.
2. சென்னை, மதுரை, திருநெல்வேலி திருச்சி, வேலூர் போன்ற நகர பகுதிகளில் வெளியே! எதிர்காலத்தில் விலைகள் உயரும் என்று கருதப்பட்ட இடங்களில், ஊருக்கு ஏற்றார் போல் 5 சென்ட்க்கு மேல் 3 சென்ட்க்கு மேல் காலி மனைகளை வைத்து கொள்ள கூடாது என்று சட்டமியற்றியது.
3. சில பகுதிகளில் 10 சென்ட் வரை வைத்து இருக்கலாம்.இவை case by case நில அளவுகள்மாற வாய்ப்பு இருக்கிறது.உச்ச வரம்பு மீறி இருக்கும் இடங்களளை அரசு கையகப்படுத்தி கொள்ளும்,
4. இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இது சம்மந்தமாக 250 க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலங்கள் வழக்குகளாக நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
5. 300 க்கு மேற்பட்ட நிலங்களை அரசே தனது பல துறைகளின் திட்டங்களுக்கு கைப்பற்றி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஹெக்டேர் நிலங்கள் உச்ச வரம்பு சட்டத்திற்குள் வந்தாலும் மக்கள் அதனை கைப்பற்றி அனுபவித்து வருகின்றனர்.
6. மேற்படி மக்கள் கைபற்றி அனுபவித்து வரும் உச்சவரம்பு சட்டம் போடப்பட்ட இடங்களை, வேறு வேறு நபர்களுக்கு கிரயம் செய்து விட்டனர். (ஏன்? பத்திரம் அலுவலகத்தில் பத்திரம் போட்டார்கள்? என்று கேட்காதீர்கள்.)
7. இதுபோல் நகர்புற உச்சவரம்பு சட்ட இடங்கள் பல கைகளுக்கு மாறி வீடு வாசல் என்று மாறி நிற்கிறது. தெரிந்து வாங்கியவர் தெரியாமல் வாங்கியவர் என்று பல நடுத்தர மக்கள் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் பெருந்தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
8. சென்னை யில் துரைப்பாக்கத்தில் , செம்மஞ்சேரியில், பூந்தமல்லியில் அனகாபுத்தூர் போன்ற ஊர்களில் பல வாடிக்கையாளர்கள் நகர்ப்புற உச்சவரம்பு நிலங்களை வாங்கி தவிப்பதை நேரடியாக கண்டு இருக்கிறேன்.
9. அரசு நகர்புறநில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்தி விட்டு அதில் வாங்குவது பெறுவதுமான கிரயங்களை பதிவுதுறை எப்படி அனுவிக்கலாம் என்று கண்டித்து மேற்படி கிரயங்களை செல்லாது என நீதி மன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள்.
10. 2008 ல், 1978 ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் என புதிய சட்டத்தை கொண்டு வந்து அரசின் இடங்களை வைத்து இருப்பவர்களை, குடியிருப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட தொகை பெற்று வரன்முறை செய்ய ஆரம்பிக்க உத்தரவு இடபட்டது.
11. பல இடங்கள் 1.5 கிரவுண்டுக்கு உட்பட்டு அதில் கிரையம் பெற்றவர்களை ( INNOCENT BUYER ) என்று கணக்கில் கொண்டு வரன் முறைப்படுத்தி சீலீங்கை உடைத்து இருந்தனர். மேற்படி சொத்துக்களை கிரயம் செய்யும் போது மிக கவனத்துடன் வாங்குதல் வேண்டும்.
12. நகர்ப்புற உச்ச வரம்பு சட்டத்தை உட்பட்ட மனைகளை வரன்முறைப் படுத்த மேற்படி சட்டம் அமலுக்கு வந்த நாள்முதல் 1994 டிசம்பர் 31 தேதி வரை கிரயம் பெற்று இருக்கும் நிலங்களுக்கு தான் இவை பொருந்தும்.
13. தமிழ்நாடு அரசு வரன்முறை படுத்துதலில் முதலில் காட்டிய வேகம் இப்பொழுது இல்லை. இதனால் பல மனுக்கள் இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது.
14. 50 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த பிறகு அதனை ஆய்வு செய்து எல்லா நிலத்திற்கு ஒரே சமயத்தில் உத்தரவு இடலாம் என்று நான் சென்னை- ஆலந்ததூரில் இருக்கும் அலுவலகத்திற்கு நான் ஒரு வாடிக்கையாளருக்காக சென்ற பொழுது சொன்னார்கள்.
15. உங்கள் இடம் உச்சவரம்பு சட்டத்தில் இருந்தால் கிராம கணக்கில் ULT (Urban Land Tax)என்று குறிப்பு இருக்கும்,அது சம்மந்தமாக வழக்கு இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிட பட்டு இருக்கும்.
16. மேற்படி நிலத்தை வரன்முறை படுத்த 1976 ல் இருந்து EC எடுக்க வேண்டும்.1994 க்கு முன் Innocent buyer சொத்து வாங்கி இருக்க வேண்டும்.
17. பல வருடங்கள் ஆகியும் வரன்முறைபடுத்துதல் முடிந்த பாடில்லை. நில உச்சவரம்பு வரன்முறை படுத்துதலை முழுமையாக முடித்திட்டால் அரசுக்கு புண்ணியமாக போகும் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.
18. கிரயபத்திரம்,தாய்பத்திரம் பட்டா போன்ற அனைத்து ஆவணங்களின் நகல்ளும்,பில்டிங்.பிளான் இருந்தால் பில்டிங் பிளானும் அதனுடன் 100 ரூபாய் நீதிமன்ற முத்திரை (ரெகுலர் முத்திரைதாள் அல்ல)
தாளில் னு செய்ய வேண்டும்
நகர்புற நில உச்சவரம்பு நிலங்களை வரன்முறைபடுத்துதலுக்கான படிவம்