-->
Breaking News
Loading...

Hindu succession act

இந்து வாரிசுரிமை சட்டம் - பிரிவுகள் 29A, 23,24 - 25.03.1989 - ம் ஆண்டில் இந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி திருமணமாகாத பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டு. ஆனால் அதை பெறுவதற்கு (1) 25.03.1989-ம் தேதியில் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும். (2) அப்பெண்ணின் தந்தை அந்த சட்டத் திருத்தம் வந்த நாளில் உயிரோடு இருக்க வேண்டும். மேற்கண்ட ஷரத்துகள் பூர்த்தி ஆகவில்லை என்றால் இந்து வாரிசுரிமை சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 29Aன் படி பெண்ணுக்கு சொத்தில் சரிபங்கு உரிமை கிடைக்காது. இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி, ஆண்களை போலவே பெண்களுக்கும் கூட்டு குடும்ப சொத்தில் சரிபங்கு உரிமையை 20.12.2004ம் தேதி முதல் அளிக்கிறது. 20.12.2004க்கு முன்பாக உயில் மூலமாக ஒரு சொத்து அல்லது பாகப்பிரிவினை மூலமாக ஒரு சொத்து வழங்கப்பட்டுள்ள சொத்துகளுக்கு இது பொருந்தாது. அந்த பிரிவில் கூறப்பட்டுள்ள பாகப்பிரிவினை என்பது பதிவு பாகப்பிரிவினை அல்லது நீதிமன்றம் மூலமான பாகப்பிரிவினையை தான் குறிக்குமே தவிர வாய்மொழி பாகப்பிரிவினையை குறிக்காது. நீதிமன்றம் முதல்நிலை தீர்ப்பாணை வழங்கியிருந்தாலும் பெண்களின் சொத்துரிமையை அது பாதிக்காது. நீதிமன்றத்தால் அதேசமயம் நீதிமன்றம் இறுதிநிலை தீர்ப்பாணை வழங்கியிருந்தால் அது முறையான, சட்டப்படியான பாகப்பிரிவினையாக கருதப்படும். 20.12.2004ம் தேதிக்கு முன்னர் முதல்நிலை தீர்ப்பாணை வழங்கப்பட்டு அதனடிப்படையில் இறுதிநிலை தீர்ப்பாணைக்கு மனு தாக்கல் செய்து, அந்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் இந்த சட்டத்தின் படி முதல்நிலை தீர்ப்பாணையில் வழங்கப்பட்ட பாகப்பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு சட்டத் திருத்தம் மற்றும் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களின் படி பூர்வீக சொத்தில் ஒரு பெண் சம பங்கு உரிமையை பெறுவதற்கு அந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட நாளில் அந்த பெண்ணின் தந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்து வாரிசுரிமை சட்டம் 2005ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி 20.12.2004ம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட பாகப்பிரிவினைகள் பதிவு செய்யப்பட்டதாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாணைகள் மூலமாக வழங்கப்பட்ட பாகப்பிரிவினையாகவோ இருந்தால் மட்டுமே அது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும். இந்த வாரிசுரிமை சட்டம் பிரிவு 23ன் படி வசித்து வரும் வீட்டை பாகம் கோரி ஒரு குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் உரிமை கோருவதை தடை செய்கிறது. ஆனால் மேற்படி பிரிவு 23 ஆனது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி நீக்க பட்டுவிட்டது என்பது மிக முக்கியமான அம்சம் ஆகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. S. A. NO - 1391/2008,DT-10.03.2014,Dhanalakshmi and others Vs Janaki Ammal and Others, (2014-4-MLJ-42)... Courtesy.. Chandru Karur

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU