-->
Breaking News
Loading...

Registration act sec 22A clarification

பாகம் மற்றும் செட்டில்மெண்டு ஆவணங்களில் சொத்தை பல பிரிவாக பிரித்து அளிக்க முடியும்.
மொத்தமே 10 செண்டுக்கு குறைவாக நிலம் உரிமையாகி அருகில் வேறு நிலம் இல்லாத நிலையில் மனையிடமாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரித்து மனையாக பதிவு செய்யப்படும்போது பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) க்கு முரணாக இருக்காது என அரசின் தெளிவுரை உள்ளது.
ஏற்கனவே தெரு (அ) ரோட்டை ஒட்டியுள்ள அதிக பரப்புள்ள நிலத்தில் பல பிரிவுகளாக மனையாக (ஒவ்வொரு மனைக்கும் ஒரு எல்லையாக ரோடு இருக்க வேண்டும் சொத்து உரிமையாளரால் ரோடு (அ) பாதை விட்டிருக்கக்கூடாது. இதனை உறுதிப்படுத்த முன் ஆவணத்தில் நில உரிமையாளருக்கு சொத்து கிடைக்கப்பெற்ற ஆவணத்திலேயே ரோடு ஒரு எல்லையாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் (அ) FMB ல் ரோடு காண்பிக்கப்பெற்றிருக்கவேண்டும்.) பிரித்து அளிக்கலாம்.
ஒவ்வொரு மனையுடன் வீடு கட்டி பல ஆண்டுகள் ஆகியிருந்தால் ஒவ்வொருவருக்கும் மனையும் வீடும் என எழுதிக் கொடுக்கலாம்.
மேற்கண்டவாறு இருந்தால் பதிவுச் சட்டம் பிரிவு 22A (2) க்கு முரணாக இருக்காது.
விடுதலை ஆவணத்தைப் பொறுத்து ஏற்கனவே உள்ள மொத்த சொத்தில் ஒருவருக்குள்ள (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்குள்ள உரிமையினை மொத்த சொத்தில் வாரிசுரிமைப்படி (அ) கூட்டுரிமையாளர் என்ற முறையில் பாத்தியம் உடையவருக்கு எழுதிக் கொடுப்பதால் ஏற்கனவே முன்பதிவு ஆவணத்தில் (அ) பட்டாவில் உள்ள முழு சொத்தினை எழுதும்போது பல பிரிவுகளாக பிரித்து எழுதவேண்டிய நிலை இல்லாததால் முன்பதிவில் மனையாக குறிப்பிடப்படாத நிலையில் விடுதலை ஆவணத்திலும் மனையாக குறிப்பிட முடியாது என்பதால் பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) எழாது.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU