தாய்லாந்து வரை தலை நிமிரும் தமிழர்கள்-
சீன அதிபரோடு தமிழ்நாட்டில் மாமல்லபுரம் வந்து உலகளவில் தமிழர்களின் பெருமை யை எடுத்து சென்ற மோடி இப்பொழுது தாய்லாந்து வரை தமிழர்களை தலை நிமிர வைத்துள்ளார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியமானது என்று வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இந்தியாவை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொண்டு வர கஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலைகளை வாஜ்பாய் தலைமையில் இருந்த பிஜேபி அரசு அமைத்தது.
இன்றைய மோடி அரசு இந்தியாவில் போக்குவரத்து வசதி இல்லாத வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் சாலைகள் மூலம் இணைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளையும் சாலை மார்க்கமாக இணைக்க முடிவெடுத்து மணிப்பூரிலிருந்து மியான்மர் வழியாக தாய்லாந்து நாட்டை இணைக்க சாலைகளை அமைக்க முடிவுசெய்து அதற்கான வேலைகளை ஆரம்பித்து முடித்து வருகிறது.
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தின் சாண்ட ல் மாவட்டத்தில் உள்ள மோரேவில் தொடங்கி மியான்மரில் மண்டலே - ரங்கூன் வரையும்.
பிறகு ரங்கூனிலிருந்து தாய்லாந்தில் உள்ள மாயிஸாட் வரை இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இதில் மோரே ரங்கூன் இடை யே சாலை அமைக்கப்பட்டு அது மக்களின்
பயன்பாட்டுக்கும் வந்து விட்டது.
தமிழர்களின் நீண்ட கால கனவை நினைவாக்க 2002ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்த சாலை திட்டம் உருவாக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு 2014 ல்
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தூசி தட்டி எடுக்கபட்டு சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு மோடி அரசு சாலை அமைத்து வருகிறது.
East-West Econo mic Corridor (EWEC) என்று சொல்லப்படும் இந்த சாலையின் மொத்த நீளம்
சுமார் 3200 கிலோமீட்டர் ஆகும். இப்பொழுது தாய்லாந்து வரை நடைபெற்று வரும் இந்த
சாலை அமைக்கும் பணி படிப்படியாக லாவோஸ், வியட்நாம் என்று விரிவாக்கம் பெற இருக்கிறது.
இந்த சாலை அமைப்பதினால் ஆசியான் நாடுகளுக்கிடையே இந்தியாவின் வர்த்தகம் வேகமாக அதிகரிக்கும். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளோடு வர்த்தகம் விரைவாக நடைபெறும்.
இந்த திட்டத்தின் மிகச்சிறப்பு என்னவென்றால் தமிழர்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைக்கும் ஆச்சரியமாக இருக்குல்ல... கொஞ்சம் பொறுங்க தமிழர்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்க உள்ளது..
இந்த ரோடு ஆரம்பிக்க இருக்கிற மணிப்பூர் கிராமமானமோரேவில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள்தான். இது ஒரு மலைக்கிராமம். சுமார் ஏழரை கிலோமீ ட்டர் பரப்பளவு கொண்ட இந்த மோரே கிராமத்தில் சுமார் 30ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசிக்கினறனர். இதில் 17ஆயிரத்துக்கும் மேல் தமிழர்கள்தான் உள்ளனர்.
இந்த ஊரின் பூர்வ குடிமக்களான குக்கஸ்கள் கூட தமிழில் தான் பேசுகின்றனர். அது மட்டுமல்லாமல் இங்கு குடியிருக்கும், பஞ்சாபி, நேபாளி, பர்மியர்கள் என்று அனைவரும் தமிழில் தான் உரையாடுகின்றனர் என்பது தமிழுக்கு பெருமையல்லவா... மோரே ஊர் மணிப்பூரில் உள்ள ஒரு குட்டி தமிழ்நாடாகும்.
இந்த ஊரில் இருக்கிற அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர்கோயில் தமிழர்களின் தெய்வப க்திக்கு ஒரு சிறந்த அடையாளமாகும். இந்த கோயிலின் பங்குனி உத்தர திருவிழாவின் பத்து நாள் விழாவில் அனைத்து மக்களும் தவறாது ஊரு விட்டு ஊரு வந்துமட்டுமல்லாமல் நாடு விட்டு நாடு நாடு வந்தும் அன்னையை வணங்கி விட்டு செல்வார்கள்..
அவ்வளவு பிரசித்தி பெற்ற கோயில் இது இங்கிருந்து தான் தாய்லாந்துக்கு மியான்மர் நாட்டின் ரங்கூன் வழியாக தரை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மாவும் இந்தியாவின் ஒரு மாகாணாமாக இருந்தது. பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை வியாபாரத்துக்காக தமிழ் நாட்டில் இருந்து பர்மாக்கு பிழைக்க சென்ற தமிழர்கள் வியாபாரத்தில் முன்னேறிய நிலையில் 1962 ம் நடந்த ராணுவ புரட்சி க்கு பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு துரத்தப்பட்டனர்.
அப்படி துரத்தப்பட்ட தமிழர்கள் பாதி பேர் தமிழ்நாட்டுக்குவந்து விட்டாலும் அவர்களால் தமிழகத்தில் இருக்க முடியாமல் மீண்டும் பர்மாக்கு செல்ல முயன்று முடியாததால் பர்மாவின் நுழைவாயிலான மோரேவில் தங்கிவிட்டனர். தற்பொழுது மியான்மரில் இந்தியா ரோடு போட்டுள்ளதால் மீண்டும் தங்களின் பர்மா வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
மோடி அரசு மியான்மரில் ரோடு போடும் வரை மோரேவில் வாழும் தமிழர்கள் ரங்கூனுக்கு
அதாவது இப்போதைய யங்கூனுக்கு செல்ல
வேண்டும் என்றால் கொல்கத்தா வந்து அங்கிருந்து விமானம் மூலமாக தான் செல்ல முடியும் என்கிற நிலைமை இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் டூ மியான்மர் இடையே சாலையை இந்திய
அரசு உருவாக்கி திறந்து விட்டதால் மோரே தமிழர்கள் தங்களுடைய 60 ஆண்டு கால கனவு நனவாகி விட்ட மகிழ்ச்சியில் மோடியை
கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இப்பொழுது பஸ் பிடித்தே மியான்மர்க்குள் நுழைந்து விடுகிறார்கள். அங்கு தாங்கள் பிறந்து வளர்ந்த பகுதிகளை பார்த்து பழைய நினைவுகளை திரும்பி பார்க்கிறார்கள். அது
மட்டுமல்ல மறுபடியும் தங்களின் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து பாத்திரங்கள் மற்றும்
ஜவுளி பொருட்களை வாங்கி சென்று பர்மா சென்று விற்று கொண்டு இருக்கிறார்கள். அ தே மாதிரி பர்மாவில் இருந்து தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்து இந்தியாவில் விற்று வருகிறார்கள்.
ஆக மோரே என்கிற ஒரு சிறிய கிராமத்தில் ரங்கூன் கலவரத்தின் பொழுது துரத்தப்பட்டு
தமிழர்கள் அங்கு ஆதிவாசிகளாக மாறி வாழ்ந்து இருந்த நிலைமையில் மோடி அரசு
அவர்களுக்கு மியான்மர்க்கு ரோடு போட்டு கொடுத்து மீண்டும் வியாபாரிகளாக மாற்றி
இருக்கிறது.
இந்த சாலை தாய்லாந்து வரை அமைக்கப்பட்டு வருவதால் மணிப்பூர் இந்திய எல்லையில் உள்ள தமிழர்கள் மீண்டும் தங்களின் வணிகத்தை தாய்லாந்து வரை கொண்டு செல்வார்கள். அது மட்டுமல்ல லாவோஸ், வியட்நாம் என்று தமிழர்களின் வியாபாரம் கொடி
கட்டி பறக்கும்.
இந்த நெடுஞ்சாலை அமைப்பட்டுள்ளதால் தற்சமயம் ஆண்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கின்ற இந்தியா - மியான்மர் வர்த்தகம் 45 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த சாலை தாய்லாந்து வரை நீடிக்கபடும் பொழுது தமிழர்களின் வர்த்தகம் தாய்லாந்து வரை விரிவடைந்து இந்தியாவின் வர்த்தகம் உயர
ஆரம்பிக்கும்.
அதோடு மியான்மர் இனி இந்தியாவின் முழு கண்காணிப்பில் வந்து விடுவதால் சீனாவால் இந்தியாவுக்கு எதிராக மியான்மரில் இருந்து தூண்டப்பட்டு வரும் தீவிரவாதம் தடுக்கப்பட்டு தெற்காசியாவில் இந்தியாவின் கை ஓங்கி நிற்கும். இதற்கு துணை நிற்க போகிறவர்கள் யாரென்றால் அவர்கள் யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்று பாடிய தமிழர்களே..
பண்டைய காலங்களில் கடல் கடந்து சென்று வாணிபம் செய்து வந்த தமிழர்களை மோடி
இப்பொழுது தரை வழியிலேயே சென்று வியாபாரம் செய்ய வழி செய்து கொடுத்துள்ளார் மோடி...