கல்வினோ எழுதிய ’A general in the library' கதையை முதலில் பார்ப்போம்.
1.அக்கதைப்படி
ஒரு சர்வாதிகாரி தன் நான்கு சர்வாதிகாரத் தளபதிகளை அணியோடும் படையோடும் அந்நகரத்தின் பெரிய நூலகத்துக்கு அனுப்புகிறான்.
அந்த நூலகத்தில் இருக்கும் எந்த புத்தகங்கள் தேவையானவை எந்த புத்தங்கள் தேவையில்லாதவை என்று வாசித்து சென்சார் செய்து ரிப்போர்ட் கொடுப்பதுதான் அவர்கள் வேலை.
ஒவ்வொரு நூலாகப் படிக்கிறார்கள். படித்து மாளவில்லை.
படைவீரர்கள் கேட்கிறார்கள் “நாங்க சும்மாதானே காவலுக்கு நிற்கிறோம்.எங்களுக்கும் புத்தகம் கொடுங்க. நாங்களும் படித்து சென்சார் செய்ய உதவுறோம்” என்கிறார்கள். வேலை அதிகமிருந்ப்பதால் தளபதிகள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
படிக்கிறார்கள் படிக்கிறார்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட மாதங்களாகியும் நூலகம் உள்ளே சென்றவர்கள் வெளியே வரக்காணோம். சர்வாதிகாரி உத்தரவிட்டு வெளியே வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்.
வெளியே வந்தால் நான்கு தளப்திகளும் சர்வாதிகாரியை பிடிக்காமல் போகிறது.உள்ளே அவர்கள் வாசித்த புத்தகங்கள் வாழ்க்கை பற்றிய் அவர்கள் பார்வையையே மாற்றிவிட்டது.
அவர்கள் சர்வாதிகாரியை எதிர்க்கிறார்கள். நான்கு தளப்திகளின் பதவியும் பறிக்கப்படுகின்றன.
அவர்கள் மீண்டும் நூலகத்துக்கு ஆவலாக செல்வதாக கதை முடியும்.
இரண்டாவதாக
ரஷ்ய எழுத்தாளர்
ஆண்டன் செகாவ் எழுதிய 'The Bet' என்ற சிறுகதை சுருக்கத்தை பார்க்கலாம்.
ஒரு பணக்காரனுக்கும் வக்கீலுக்கும் இடையே பந்தயம் ஒன்று உருவாகிறது.
15 ஆண்டுகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது சாத்தியமா? என்ற பந்தயம்தான் அது. வக்கீல் சாத்தியம் என்கிறான்.
பணக்காரன் சாத்தியமில்லை என்கிறான்.
“நீ பதினைந்து வருடங்கள் மனிதர்களிடம் பேசசாமல் ஒற்றை அறையில் அடைபட்டு இருந்தால் உனக்கு இரண்டு மில்லியன் பணம்தருகிறேன்” என்கிறான் பணக்காரன்.
பந்தயம் தொடங்குகிறது.
வக்கீல் சிறைபடுகிறான்.
முதல் வருடம் வக்கீலுக்கு மன அழுத்தமாக இருக்கிறது.தனக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடுகிறான். வைனாக குடிக்கிறான். பியானோ வாசிக்கிறான். என்ன செய்ய என்று தெரியவில்லை.
பின் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கிறான்.
முதல் கட்டமாக காதல் நாவல்கள். அடுத்ததாக இன்னும் அழமான புத்தகங்கள். அடுத்ததாக பல்வேறு மொழிகள், பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் என்று பதினைந்து வருடங்களாக வாசிக்கிறான். வாசித்துக் கொண்டே இருக்கிறான்.
இப்போது பணக்காரனுக்கு பயம் வருகிறது.பந்தயம் முடிய இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது .
தோற்றுவிட்டால் இரண்டு மில்லியன் காலி.
வக்கீலை கொன்று விட்டால் என்ன? என்று. யோசிக்கிறான். தன்னிடம் இருக்கும் சாவியை எடுத்துக் . கொண்டு வக்கீல் அறையை திறக்கிறான்.
அங்கே மெலிந்த தேகமாய் வக்கீல் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவனை தலையணையை வைத்து அமுக்கிக் கொள்வது என்று நினைக்கும் போது வக்கீல் பண்க்காரனுக்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் பார்வைக்கு இருக்கிறது.
அக்கடிதத்தில் புத்தகங்கள் மூலம் தான் இவ்வுலகை 15 வருடங்களாக பார்த்துக் கொண்டிருந்த்தாக இருக்கிறது. ”எனக்கு உன் பணம் வேண்டாம. புத்தக வாசிப்பு மூலமாக என் மனம் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டது. பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. நானே பந்தயத்தில் தோற்று விடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
மறுநாள் பணக்காரனிடம் வாட்ச்மேன் வந்து பந்தயம் முடிய ஐந்து மணி நேரம் இருக்கும் போது வக்கீல் தப்பித்து பந்தயத்தில் தோற்று வீட்டதாகச் சொல்கிறான்.
சந்தோஷப்பட முடியாத நிலையில் பணக்காரன் தவிக்கிறான்.
இப்படியாக கதை முடிகிறது.
புத்தக வாசிப்பு என்பது இப்படித்தான் மனிதனை அப்படியே தலைகீழாக புரட்டிப் போடும்.
போட வேண்டும்.