♥ வார்த்தைகளை மறந்து விடுங்கள்
உங்கள் வார்த்தைகள் பேச்சுக்கள் அனைத்தும்
உங்கள் உள்ளிருக்கும் குப்பைகளே
மற்றவர்களுக்கு இவை எந்த விதத்திலும் நன்மை பயக்காது
மனதிற்குதான் வார்த்தைகள் தேவை
இதயத்திற்கு வார்த்தைகள் தேவை இல்லை
வார்த்தைகளற்ற மௌனத்தில் தான்
அழகானதெல்லாம் நிகழும்
அழகு, அன்பு, பிரார்த்தனை
எல்லாம் உங்களிடம் வரும்
வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால்
அவை உங்களை வசியப்படுத்தி விடும்
அன்பு என்ற வார்த்தை அன்பு அல்ல
அது ஒரு குறியீடு போன்றது
அன்பு உண்மையில் இருக்குமானால்
அங்கு வார்த்தைகள் தேவையில்லை
வார்த்தைகளை அப்படியே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்
மனிதனின் உள்ளே பாருங்கள்
கண்களின் உள்ளே பாருங்கள்
முழுமையை உணருங்கள்
வார்த்தைகள் தேவை இல்லை ♥
♦ ஓஷோ ♦