அறிவு என்பதற்கான ஒப்பற்ற விளக்கம். சென்ற இடத்துச் செலவிடாது என்பது எண்ணிப் பார்க்கத் தக்கது. புலன்களை "ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் நெறியின் புறம் செலா" என்றான் கம்பன். புலன்களை அதன் வழியே விடல் தீது.
கண்போன போக்கில் கால் போகலாமா என்று எளிமைப்படுத்திக் கேட்டது திரையிசை.
புலன்களை, பொருளை, ஆற்றலை நன்மை பயக்குமாறு கொண்டு செலுத்துவதே அறிவு!
நம் உணர்வை, நம் ஆற்றலை நம் செயலை நமக்கோ, பிறருக்கோ நன்மை பயக்கக் கொண்டுசெலுத்துவதே அறிவுக்கான வரையறை! (Definition)