-->
Breaking News
Loading...

சாய்க்கிரோ ஹோண்டா

பிழைக்கத் தெரியாத முட்டாள் னு அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா . 
தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் னு கேலி பேசினாங்க நண்பர்கள் .
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி,  கடைசியில் பிரம்மாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா .  தனது வாழ்க்கை அனுபவத்தைச் சாறுபிழிந்து சொன்னார் . : 

வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி .
டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்கணும் என்பது மாணவரான நம்ம ஆளு கனவு .  யாருக்காகவும் அவர் காத்திருக்கலை . அப்பாவின் வசவு , சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே,  மாதிரி உலைக்கூடம் ஒன்னை 1928 -- ம் ஆண்டு உருவாக்கினார் .  இரவு பகலாக உழைத்தார் . 
ஓராண்டு உழைத்து உருவாக்கிய , மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார் .  எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை என்று நிகாகரித்து விட்டார்கள்  பொறியாளர்கள் .  முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது . மனம் பாரமாக இருந்தது .  திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் காலி .  எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள் .
புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார் .  மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி ''அருமை'' என்று பாராட்டி ஏற்றுக்கொண்டது .  தயாரிப்புக்கு கான்டராக்ட் கொடுக்கப்பட்டது .  மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு .  பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும் .  எனவே,  கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா .  அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால்,  அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு .  எவ்வளவு முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு . __ அப்பா .
வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய் ?  __ உயிர் நண்பன் .
தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் நம்ம ஆளு . ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார் .  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது . 
கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது .  அமெரிக்கா போட்ட குண்டு, இவரது தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது .  இவர் வாழ்க்கை முடிந்ததுன்னு பேசிக் கொண்டார்கள் நண்பர்கள் .  ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிட்டு , தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர் செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கி காட்டினார் நம்ம ஆளு .
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம் .  ஒருநாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் அவரோட தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிருச்சு .  மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை .
வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களை கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுட்டாரு .  இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ? எண்ணிப் பாருங்கள் .  தனது அப்போதைய நிலைமை பற்றிச் சொல்றார் .  நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிக்கூட கவலைப்பட மாட்டேன் .  இருக்குற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன் .
இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் .  ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம் .  எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு .  கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன .  எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள் .  சாய்க்கிரோ ஹோண்டா,  வீட்டில் அமர்ந்திருந்தார்.  அருகில் சைக்கிள் நின்றது.  சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.  அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி,  இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று நம்மாளுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது .
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் .  புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து,  தனது சைக்கிளில் அவர் பொருத்தியபோது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது .  அதை எடுத்துட்டு ஜம்மென்று ஊரை சுற்றிவந்தார் ஹோண்டா .
அதேபோன்று எனக்கும் செய்து கொடு ன்னு மொய்க்கத் தொடங்கினாங்க மக்கள் .  அவரும் சளைக்காம செய்து கொடுத்தார் .  விளைவு ? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது .  இதையே பெரிய தொழிலா மாற்றினால் என்னன்னு சிந்தித்தார் .  கையில் பணமில்லை .  வங்கிகள் கடன் தரத் தயாரில்லை,  துரதிர்ஷ்டக்காரன் ன்னு எல்லோரும் சான்றிதழ் கொடுத்து வைத்திருந்தார்கள் .  கலங்கலை தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து,  ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார் .  முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக  நியமிக்கப்படுவார்கள் னு உறுதி அளித்தார் .  5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தாங்க .  மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது .  முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தப்போ,  தானே உலைக்கூடத்தில் அமர்ந்து,  அழகான வடிவமைப்போட அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டு வந்தார் .
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றவர்தான் நம்ம ஆளு சாய்க்கிரோ ஹோண்டா .  இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது .  ஹோண்டா கார்களுக்கு மேலே நாடுகளிலும் பெரும் வரவேற்பு .  எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம் .
ஹோண்டா தயாரிப்புகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது .  அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான் .
- '' வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி ''

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU