*என் நலனுக்கு அடுத்தவர் பொறுப்பேற்க வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.
பிறர் மீது பொறுப்பு சுமத்துவதை நான் நிறுத்தியாக வெண்டும். அதுதான் என்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது. நான் எனது வாழவிற்கு பொறுப்பேற்க வேண்டும். *"நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பல்ல. எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும். என்னவோ தவறாக இருக்கிறது. எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்."* என்று சதா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
விழிப்புணர்வு என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் விழிப்புணர்வு இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் எனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நான் அதைச் செய்வதில்தான் விழிப்புணர்வு இருக்கிறது. *கவனித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு, நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒரு சாட்சி எனக்குள்ளே இருக்கும்போது அதுதான் விழிப்புணர்வு*. அபபோதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது.
ஆழ்ந்த தியானத்தில் மரணத்துக்குப் பழகிப் போகும்போது பயம் மறைந்து போய்விடுகிறது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, *"நான் இந்த உடல் அல்ல. நான் இந்த மனம் அல்ல. பிறகு எனக்கேது மரணம்?"* என்பது தெரிந்துவிடுகிறது. இந்த உடல் மண்ணோடு மண்ணாகிப் போகும் ஆனால் விழிப்புணர்வு என்றும் இருக்கும். அப்போது பயம் மறைந்து போய்விடுகிறது. *பயம் மறைந்து விடும்போது பிறருடைய பயத்தை நீக்க வேண்டும் என்ற மகத்தான ஆசை வந்துவிடுகிறது*. பயத்தில் வாழ்கிறவர்கள் துயரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பயம் சூழ்ந்த பயங்கரமாக இருக்கிறது.
கவனிப்பது என்றால் சுதாரித்து இருப்பது. கவனமாக இருப்பது. ஊக்கமாக நின்றிருப்பது மனதைக் கொண்டு எதையும் விகாரப்படுத்தாமல் வருவதை அப்படியே பெற்றுக் கொள்வது. உள்ளே எந்த இரைச்சலும் இல்லாமல் மெளனித்திருப்பது. தூங்கிக் கொண்டிருப்பதல்ல. முழுக்க விழித்திருப்பது. என் வீடு தீப்பிடித்துக்கொண்டால் எப்படி நடந்து கொள்வன் ? தூங்குவதற்கான நேரமா அது? வீடு தீப்பற்றி எரியும்போது தூங்க முடியாது. வீடு தீப்பற்றி எரியும்போது தூக்கக் கலக்கத்தில் இருக்க முடியாது. வெகு சுதாரிப்போடு இருப்பேன்.
*சுதாரிப்போடு விழிப்புணர்வுடன் இருப்பதுவே தியான நிலை.*