-->
Breaking News
Loading...

கவியரசர் கண்ணதாசன்

எழுத்தாளன் மரணிக்கலாம்.... ஆனால், அவன் எழுத்துக்கள் சாவதில்லை... இந்த வரிகள்... கவியரசர் கண்ணதாசனுக்கு மிகச்சரியாகவே பொருந்தும்...<;
தமிழ் கவிதை உலகிலும், திரையிசை உலகிலும் தனக்கென்று தனி முத்திரைப்பதித்த கண்ணதாசனின், கலை வாழ்க்கை, 1949 ஆம் ஆண்டு, கன்னியின் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற, கலங்காதிரு மனமே என்ற பாடல் வரி மூலம், தொடங்கியது.
திராவிட இயக்க பற்றாளராக மாறிய கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும், மிகவும் மைல் கல்லாக அமைந்த, "அச்சம் என்பது மடமையடா" பாடல் மூலம், திரையிசை உலகில் அழுத்தமாக கால் பதித்து, ரசிகர்களை, தன் பாடல் வரிகளுக்கு தாசனாக்கினார், இந்த கண்ணதாசன்...
திராவிட இயக்கத்தின் மீதான கண்ணதாசனின் பற்று, அவரை சிறை வரைக் கொண்டு சென்றது. 1953-ல் நடைபெற்ற டால்மியாபுரம் போராட்டத்தில் கலந்து கொண்ட கண்ணதாசன், ஒராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த போராட்டம், அவரை அழுத்தமாக அரசியல் களத்தில் கால் பதிக்கத் தூண்டியது. திராவிட பற்றாளராக மாற்றியது. கலை வாழ்க்கையினூடே, அரசியல் ஆளுமையாகவும் மாற்றியது. கவிஞரின் தோரணையை விட... அரசரின் தோரணை தான் கவியரசர் கண்ணதாசனிடம் இருக்கும், என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறும் அளவுக்கு, அரசியலில் தடம் பதித்தார் கண்ணதாசன்...
அரசியலையும், கலையையும், தனது வாழ்க்கையில் இருந்து மட்டுமே எடுத்துக்கொண்டு வெளிப்படுத்திய மாபெரும் கலைஞர் கண்ணதாசன்... தமிழ் திரையிசையில், எம்.எஸ்.விஸ்வநாதனும், கவியரசர் கண்ணதாசனும், தங்களின் ரசவாதத்தால் உயிர் கொடுத்தார்கள், என்று தான் சொல்ல வேண்டும்... வாழ்வின் தத்துவங்களை பாடல்களாக்கி, நிரந்தரமாக காற்றில் கலந்துவிட்டு சென்றுள்ளார் கண்ணதாசன்...
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை தான், கண்ணதாசனின் பேனா தீட்டிய கடைசி பாடல்... அன்பு, பாசம், ஏக்கம், தவிப்பு, வாழ்வின் தத்துவம், என வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை, இன்றைக்கும் மக்களுக்கு கடத்திவிட்டு சென்றுள்ள உன்னத படைப்பாளர் கண்ணதாசன்...

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU