-->
Breaking News
Loading...

விவசாய அறிவுரை களம்

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)#சோளம்_விதைத்தால்_கோரை வருவதில்லை.


#சோளம் விதைத்த பூமியில் #மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்
#கம்பு விதைத்த பூமியில் #வாழை_நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது
#கம்புபோட்ட_வயலில்_கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
#யூரியாவுக்கு பதிலா மாட்டு #கோமியம்
#டிஏபிக்கு பதிலா #ஜீவாமிர்தம்_அமுதகரைசல்
#பொட்டாஷ்க்கு பதிலா #அடுப்பு_சாம்பல்
#தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், #கொழுஞ்சி_விதைப்பு
#ஆல்_19க்கு பதிலா #பஞ்சகவ்யா
#பயிர்_ஊக்கிக்கும்_பஞ்சகவ்யா
#பூச்சிகொல்லிக்கு பதிலா #சிட்டுக்குகுருவி_கரிச்சாங்குருவி_காகம்_தேன்சிட்டு_பல்லி_பூரான்_தேள்_மயில்_பாம்பு
#பூச்சிவிரட்டிக்கு_வேப்பஎண்ணை_புங்கஎண்ணை
#மகரந்தசேர்க்கைக்கு_தேன்பூச்சி
#பார்த்தீனியா_விஷசெடியை_அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் #கல்உப்பு
#களைக்கொல்லிக்கு பதிலா #மாட்டுகோமியம்
#ஏழு_அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் #சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு
பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி
நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.
மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.
தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.
அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
வாகை மரம் வறட்சி  தாங்கி வளரக்கூடியது.
கொழிஞ்சியை பிடுங்கி  காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக  பிடிக்கும்
நெல்லுக்குள் நண்டு ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
வாழைகுள் வண்டி ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
தென்னைக்கு  தேரோட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
மாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க  பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !
தாமரை இலையை  கரையான் அரிப்பதில்லை
தொழுஉரத்தை நீர் பாய்ச்சும்முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும்.
எப்போதெல்லாம் தேன் குறைவாக விளைச்சல் உள்ளதோ அப்போதெல்லாம் விவசாயம் பொய்த்து போய் விடும்.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU