-->
Breaking News
Loading...

மகாபாரத கதை

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள்.
துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
திரௌபதி உணவு பரிமாறிக் கொண்டே, துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள்.

உடனே,
அவளை அவமானப் படுத்த எண்ணிய துரியோதனன்,
ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை ?
என்று கேட்டான்.
திரௌபதிக்கு
தூக்கி
வாரிப்போட்டது.
நாடி நரம்புக ளெல்லாம் தளர்ந்தன.
அவளால்,
அந்தக் கேள்வியை
ஏற்கவோ, தாங்கிக் கொள்ளவோ, முடிய
வில்லை.
செய்வதறியாது, பரிமாறுவதை பாதியிலே நிறுத்தி விட்டு உள்ளே ஓடினாள்.
கண் கலங்கி
நின்றாள்.
அதே நேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.
கலங்காதே திரௌபதி ! நடந்ததை நானும் கவனித்தேன்.
எல்லோர் முன்னிலை யிலும் உன்னை அவமானப் படுத்தி,
அழ வைக்க நினைத் திருக்கிறான் துரியோதனன்.
அவனுக்கு சரியான பாடம் கற்பிக்கலாம்.
நீ, நான் சொல்வது போலவே செய்.
மீண்டும்
அங்கு உணவு பரிமாறப் போ !
துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு,
ஏன் பதில் கூறவில்லை ? என்பான்.
உடனே,
நீ இன்று தக்ஷகன் முறை என்று சொல்.
அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான் என்றார் பகவான்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்ட முடியாமல் நம்பிக்கையுடன் விருந்து மண்டபத்துக்கு திரும்பவும் சென்றாள் திரௌபதி.
துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும்,
அவன்  விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான்.
எனக்குப் பதில் கூற வில்லையே
இன்று யாருடைய முறை ?
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்
பியது போலவே, இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென சத்தமாகவும் பதில் தந்தாள் திரௌபதி.
அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போல அதிர்ந்தான் துரியோதனன்.
சட்டென எழுந்து உடனே அங்கிருந்து வெளி
யேறினான்,
திரௌபதிக்கு ஒரே ஆச்சரியம்.
உடனே கண்ணனிடம் ஓடோடி வந்தாள்.
கண்ணா ! இதென்ன மாயம் ?
யாரந்த தக்ஷகன் ?
அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன்,
இப்படிப் பேயறைந்தாற் போல் பதறி, பயந்து ஓடுகிறான் ? என்று கேட்டாள்.
கண்ணன் அதற்கான காரணத்தையும், அந்த பழைய கதையையும் சொன்னான்.
துரியோதன
னின் மனைவி பானுமதி மகா பதிவிரதை.
கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி,
ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதிலே குறியாக இருந்தான்.
மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.
திருமணமாகி மாதங்கள் பல கடந்தும்,
மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்கு துளி கூட கிட்டவே இல்லை.
அவனது அன்புக்காக மிகவும் ஏங்கினாள்.
தெய்வங்களை எல்லாம் வேண்டினாள்.
ஒரு நாள்,
அவள் தவம் பலிக்கும் வேளையும் வந்தது.
முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் எளிய வழி ஒன்றைக் கூறினார்.
மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும் படியும் கூறினார் முனிவர்.
பானுமதியும் அதன் படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன் சுவையும் சேர்த்து,
முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி.
இரவின் இரண்டாம் சாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன்.
அப்போது,
அவன் மது அருந்தி யிருந்தான்.
பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை.
ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.
கை தவறி கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது.
அப்போது அங்கே சென்று கொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலை முழுவதும் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன்.
பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால்,
அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.
உடனே,
அவன் அவள் முன் மானிட உருவில் தோன்றி தன் ஆவலை வெளியிட்டான்.
தன்னை வருந்தி அழைத்தது அவள் தான் என்றும் வாதாடினான்.
பதிவிரதையான பானுமதி பதறினாள், துடிதுடித்தாள்.
துரியோத
னனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும்.
தான் அவளது அன்பையும் பிரேமையையும் சரியாக புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.
தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான்.
தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன்.
பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்
தான்,
அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது.
எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவனும் விரும்ப
வில்லை.
அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும், அவன் தயாராகவும் இல்லை.
எனவே,
ஒரே ஒரு நிபந்தனை விதித்தான்.

அந்தப்
புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு,
பௌர்ணமி தோறும் பானுமதியைக் காண நான் வருவேன்.
பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி வழி அனுப்ப வேண்டும்.
அப்போது தான் அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக,
அவளின் கணவனான துரியோதனனும் என்னை கண்டிப்பாக வணங்க வேண்டும்,
என்று கூறி விட்டு மறைந்தான் தக்ஷகன்.
அன்று முதல் இன்று வரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி.
துரியோதனனும் பய பக்தியோடு அதில் பங்கு கொள்கிறான்.
இந்தச் சம்பவம், துரியோத னனுக்கும் பானுமதிக்கும், தக்ஷகன் என மூவருக்கு மட்டுமே தெரியும்.
இதனை வெளியே வேறு யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்.
இதை நீ அவனிடம் கூறியது தான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
துரியோ
தனனால்
தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய, கண்ணனுக்கு நெகிழந்து  நன்றி கூறினாள் திரௌபதி.
இதைத் தான் நம் பெரியோர்கள், பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது,
ஸ்ரீகிருஷ்ண தந்திரம் என்ற நூலிலிருந்து,
அபூர்வமான பெரும் பாலோர்க்கு தெரியவே தெரியாத
தகவல்கள் இது.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU