-->
Breaking News
Loading...

DTCP அப்ரூவல் என்பது என்ன...?

DTCP அப்ரூவல் என்பது என்ன...?
சென்னைப் பெருநகர்

வளர்ச்சிக் குழுமம் (CMDA) &  Directorate of Town and Country Planning – DTCP.. ?
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், 1971ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட விதி -பிரிவு 49ன் படி, சென்னைப் பெருநகர்ப் பகுதியின் வளர்ச்சியைத் திட்ட அனுமதி வழங்குவதின் மூலமாக ஒழுங்குபடுத்துகிறது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னைப் பெருநகர்ப் பகுதியில் உள்ள உள்ளாட்சி நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதி வழங்க, தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளது. அதன்படி, பொதுவாக அனுமதிக்கப்படும் சாதாரண வகைக் கட்டிடங்கள், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் வணிக உபயோக மேம்பாடுகள், மனைப்பிரிவு மற்றும் சிறிய நிலப் பகுதியில் தீர்மானிக்கப்படும் மனை உட்பிரிவு ஆகிய வளர்ச்சிகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் திட்ட அனுமதி வழங்கி வருகின்றன.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டிடங்கள், தொகுப்புக் கட்டிடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டிடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது, மற்றும் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
"பி" - பிரிவு சிறப்பு வகைக்கட்டிடங்கள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலனை செய்கிறது.
"சி" - பிரிவு உள்ளாட்சி மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராத தொழிற்சாலை மற்றும் நிறுவனக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இங்கு பரிசீலனை செய்யப்படுகின்றன.
"மனைப்பிரிவு" பிரிவு:-
உள்ளாட்சி மன்றத்தின் அதிகார வரம்பிற்கு மிகைப்பட்ட பெரிய மனை உட்பிரிவு மற்றும் பெரிய மனைப்பிரிவுகளின் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இங்கு பரிசீலனை செய்யப்படுகின்றன.
பல அடுக்குமாடி திட்ட அனுமதிப் பரிசீலனைப் பிரிவு:-
பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் திட்ட அனுமதி மற்றும் தகவல் தொழிற்நுட்ப உபயோகத்திற்கான பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் திட்ட அனுமதி விண்ணப்பங்களை இப்பிரிவு பரிசீலனை செய்கிறது.
திட்ட அனுமதி வழங்க, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வகுத்து இருக்கும் வழிமுறைகள்:
முதலாவதாக கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள்:-
இப்போது கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவது மிகவும் எளிதானதாகும். திட்ட அனுமதி பெறுதலில் உள்ள சங்கடம் மற்றும் கால தாமதம் ஆகியவை எல்லாம் கடந்த காலச் செய்தியாகும். இப்போதுள்ள புதிய ஒழுங்கு முறையில், நீங்கள் திட்ட அனுமதி விரைவில் பெறுவதை இக்குழுமம் உறுதி செய்துள்ளது.
திட்ட அனுமதி என்றால் என்ன?
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின்படி சென்னைப் பெருநகர்ப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாயினும் அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன் கூட்டியே பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட திட்ட அனுமதி 3 வருடங்களுக்குச் செல்லத்தக்கதாகும்.
நீங்கள் திட்ட அனுமதியை எவ்வாறு பெற வேண்டும்?
திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க இரண்டு வகையான விண்ணப்ப படிவங்கள் உள்ளன. மனைப்பிரிவிற்கு படிவம் - "அ" மற்றும் மற்ற அனைத்து கட்டிட வளர்ச்சிகளுக்கு படிவம் - "ஆ" வை பயன்படுத்த வேண்டும். படிவம் "இ" என்பது விண்ணப்பதாரர் மற்றும் நில உரிமையாளரின் பொறுப்புறுதி மொழிச் சான்றாகும்.
மேற்படி விண்ணப்ப படிவத்தை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
படிவம் - "அ" மனைப் பிரிவிற்கானது. படிவம் - "ஆ" மற்றும் "இ" கட்டிட அனுமதிக்கானது. படிவம் - "ஆ" வை நன்கு பூர்த்தி செய்து அதில் மனுதாரர் மற்றும் பதிவு பெற்ற நிலஅளவையாளர் கையொப்பமிட்டு, சரிபார்ப்பு பட்டியலுடன் உரிய ஆவணங்கள், வரைபடங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
யாரிடம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்?
சிறப்பு வகைக் கட்டிடங்கள் (தரைத்தளம் +3 தளங்கள் கொண்டவை), தொகுப்புக் கட்டிடங்கள் மற்றும் பல அடுக்கு மாடி கட்டிடத்திற்கான ( 4 தளங்களுக்கு மேல்) திட்ட அனுமதி பெற விழையும் விண்ணப்பங்களைச் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
இவை தவிர மற்ற வளர்ச்சிக் கட்டிடங்கள், சாதாரண வகைக் கட்டிடங்கள் ஆகியவைகளுக்கான திட்ட அனுமதி பெற விழையும் விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய இடங்களில், தங்கள் மனை அமையும் இடத்தைப் பொருத்து, சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமைத்திட்டம் / விரிவான வளர்ச்சித் திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட நிலஉபயோகம் பற்றிய விதி மற்றும் வளர்ச்சிக் கட்டுபாடு விதிகளின்படி தங்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்புடையதாக தங்கள் விண்ணப்பம் இருந்தால், திட்ட அனுமதி வழங்கப்படும், இல்லையெனில் திட்ட அனுமதி (உள்ளாட்சி மன்றம் / செ.பெ.வ.குழுமத்தால்) மறுக்கப்படும்.
மனை பார்வையிடப்படுமா?
கட்டிட அனுமதி ஆய்வாளரால்/நகர் திட்டமிடல் அலுவலரால்/சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலரால் உங்களது மனை மற்ற மனைகளைப் போலவே விதிவிலக்கில்லாமல் பார்வையிடப்படும்.
திட்ட அனுமதி விண்ணப்பத்தில் முடிவு எடுக்க எவ்வளவு காலம் ஆகும்?
சில அசாதரணமான சூழ்நிலைகள் தவிர மற்ற அனைத்து விண்ணப்பங்களும் குடிமக்கள் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கால நிர்ணயித்தின்படி முடிவு செய்யப்படும்.
திட்ட அனுமதிப் பரிசீலனையின் முடிவினால் நீங்கள் பாதிக்கப்பட்டதாக கருதினால் உங்களுக்குள்ள உரிமை என்ன?
உங்களின் தீர்மானத்திற்கு உள்ளாட்சி நிறுவனத்தாலோ அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தாலோ திட்ட அனுமதி மறுக்கப்பட்டால் நீங்கள் அரசிற்கு மேல் முறையீடு செய்யலாம்.
நீங்கள் திட்ட அனுமதிக்கு விண்ணப்பம் செய்யாமலே வளர்ச்சி மேற் கொண்டால் என்ன நடக்கும்?
நீங்கள் திட்ட அனுமதி பெறாமலேயே கட்டுமானத்தை மேற் கொண்டால் அது அங்கீகாரமற்ற வளர்ச்சியாகக் கருதப்படும். சட்ட விதிகளின்படி அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை இடிக்க முடியும் அல்லது பூட்டி முத்திரையிட்டு மூடி வைக்க முடியும்.
அங்கீகாரம் பெற்ற வளர்ச்சியில் விதிமீறல் இருப்பின், அம்மீறல்களுக்கு தனியாக விண்ணப்பம் செய்து உரிய ஆணை பெற வேண்டும். அந்நிலையில் விதிமீறல்களைத் தெளிவாக காட்டும் திருத்திய வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். சாதாரணமாக திட்ட அனுமதி பெற விண்ணப்பம் சமர்ப்பித்தலில் உள்ள பரிசீலனை நடைமுறைகள் இதற்கும் செயல்படுத்தப்படும்.
நீங்கள் கட்டிட உரிமத்திற்கான கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
உங்களுடைய விண்ணப்பம் அங்கீகாரம் அளிக்கத் தகுதி உள்ளது என்ற நிலைவந்தவுடன் வளர்ச்சிக் கட்டணம் செலுத்த வேண்டியது பற்றிய கேட்புக் கடிதம் அனுப்பப்படும்.
உத்தேசித்துள்ள உபயோகம் மற்றும் தளங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு கட்டணங்களின் தொகை இருக்கும்.
மேம்பாட்டாளர் என்ற முறையில் உங்களின் கடமை என்ன?
எந்தவொரு வளர்ச்சிக்கும்/கட்டுமானத்திற்கும் திட்ட அனுமதி பெற வேண்டும். திட்ட அனுமதியில் தெரிவிக்கப்பட்டுள்ள கால வரம்பிற்குள் வளர்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்.
வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் நில உபயோக விவரம் ஆகியவற்றை எங்கு நீங்கள் பெறலாம்?
எண்.1, காந்தி-இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் இயங்கிவரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலக வளாகத்தில் முதல் மாடியின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தில் விளக்கங்கள் பெறலாம்.
ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தில் வழங்கப்படும் மற்ற வேலைகள் என்ன?
◾நில உபயோக மண்டலம் பற்றிய விளக்கங்கள் வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் உடனுக்குடன் வழங்குதல்
◾அங்கீகரிக்கப்பட்ட மனை மற்றும் குடியிருப்புகளின் திட்ட அனுமதி பெற்ற வரைபட நகல் (இதற்கு அங்கீகார எண் பற்றிய விபரம் தெரிவிக்க வேண்டும்.
வரைப்படத்திற்கான கட்டணம் வரைபடத்தின் அளவிற்கு ஏற்றவாறு இருக்கும்)
◾வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் புத்தகம், திட்ட அனுமதி விண்ணப்பங்கள், சரிபார்ப்புப் படிவங்கள்
◾வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி தங்களின் வளர்ச்சித் திட்டம் ஏற்புடையாக உள்ளனவா என்பது பற்றிய விளக்கங்கள்.
◾வாகனம் நிறுத்தும் தளத்துடன் கூடிய சாதாரண வகைக் கட்டிடங்கள் சிறப்பு வகை மற்றும் தொகுப்புக் கட்டிடங்கள், பலமாடி அடுக்ககங்கள் கொண்ட கட்டிடங்கள் ஆகியவற்றிக்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இம்மையத்தில் பெறப்பட்டு அனுமதிப்பதற்கான ஒப்புகை கடிதம் வழங்கப்படுகின்றன.
◾மற்ற விண்ணப்பங்கள் மற்றும் குழுமத்தின் பதிப்புகள்
◾வளர்ச்சிக் கட்டுப் பாட்டு விதிகளுக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்க உரிய ஆலோசனைகளை வழங்குதல்.
வேறு கேள்விகள் ஏதேனும் இருந்தால்?
இக்குழுமத்தின் அலுவலர்கள் உங்களுக்கு உதவுதலில் பெருமகிழ்ச்சி அடைவர். எனவே அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதில் தயக்கம் கொள்ள வேண்டாம்.
reference:
http://www.cmdachennai.gov.in/tamil/planningpermissiont.html
DTCP அப்ரூவல் என்பது என்ன?
நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நில மாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொ ள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படும்.
இது சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வே றுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதி கார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனை த்து பகுதிகள் வரை நீடிக்கிறது.
எனவே டீ.டி.சி.பி. அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்து வம் அதிகரிக்கிறது. அதிலு ம், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது.

அப்ரூ வல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந் த நிலம் எந்த மாவட்டத் தில் உள்ளதோ அந்த மாவ ட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.
இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பி க்க வேண்டும்.
அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மா வட்ட டீ.டி.சி.பி. அலுவலகத் துக்கு அந்த பிளானை அனு ப்பி வைப்பார்கள். டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங் களில் ஆராய்ந்த பிறகு அத ற்கு அனுமதி கொடுப்பார்கள்.
சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள்.
அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்ல து உரிமை யாளர் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவ தோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்ற மும் செய்யக் கூடாது. அந் த பிளானில் உள்ள படியே பிளாட் (Plot)களை விற்க வே விளம்பரம் செய்ய வோ வேண்டும்.
24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாய த்து அனுமதி தேவைப்படும்.
அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டு மல்லாது, வேறு எந்தவித மான திட்டங்களுக்கும் அனு மதி வழங்க கிராமப் பஞ்சா யத்துக்கு அதிகாரமே கிடை யாது.
அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடைய கட்டுப்பாட்டின்கீழ் வரும். என வே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.
விவசாய நிலத்தை மட்டுமல் லாது, உற்பத்தி / தொழிற்சா லை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிக ளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதி தேவை.
சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியி ருப்பு பகுதியாக மாற்ற திட்ட மிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி. அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.
டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத் தைப் பற்றிய தகவல் களையும், அதற்கு ஆட்சேபணைகளை யும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறி விப்பு வெளியிடுவா ர்கள்.
எந்த ஆட்சேப ணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன.
இதில் கட்டப் படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத் தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப் படாது.
சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடி யும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானு க்கு அனுமதி மறுக்கப்படும்....
சொத்துக்கள் வாங்குதல் அடுக்கக குடியிருப்பு வாங்கும் முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள்.கடினமாக சேர்த்துள்ள சேமிப்பு பணத்தினை காப்பாற்றுங்கள்
◾அங்கீகாரம் பெற்ற வரைபடம் பற்றிய விவரங்கள் கட்டுமான இடத்தில் பார்வைக்கு வைக்கப்படுள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்.
◾அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி அடுக்ககம் கட்டப்பட்டுள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்.
◾மனையின் உரிமையாளர்/உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு பிரிக்கப்படாத மனைப் பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை சோதித்துப் பாருங்கள்.
◾மனையின் உரிமையாளர்/உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்ககக் குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதைச் சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.
◾கட்டுமானம் முடிந்த பின்னர் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால், கட்டிடப் பணி வரைப்படத்தின்படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி முடிவுச்சான்றிழை மேம்பாட்டாளர் பெற்றுள்ளரா என்பதை சோதித்துப்பாருங்கள்.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU