பாரதத்திற்கு பெருமை சேர்த்த கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜன் (டிச. 22 1887 - ஏப். 26 1920)
சுமார் 131 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை (PI)குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை (PI)என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” (Greek Letter PI) என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை (PI) என்பது ஒரு நிலை இலக்கம் (Constant Number). 1987 இல் பை (PI) இன் மதிப்பைத் துல்லியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் இயற்றிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது Computer Algorithms என்ற முறையில் சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.
கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜத்தின் ஜன்ம தினமான இன்று அவரின் மேதாவிலாசத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம்!!