திருச்சிற்றம்பலம்
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே
பொருள்:
எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூதகணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்
முதலாம் திருமுறை திருஞானசம்பந்த பெருமான் அருளிய சீகாழி திருப்பதிகம்
சிவ சொந்தங்களுக்கு அடியேனின் காலை வணக்கம்
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய்! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!
திருச்சிற்றம்பலம்