-->
Breaking News
Loading...

குபேர கிரிவலம் என்றால் என்ன?

குபேர கிரிவலம் என்றால் என்ன?

அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்;

பல நூற்றாண்டுகளாக மறைவாக இருந்த இந்த ரகசியமானது 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வாழ்ந்து வந்த ஜோதிட பேராசியர் பி.எஸ்.பி. ஐயா அவர்களால் ஜோதிட மாத இதழ்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது;

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் குபேரன்,வான் உலகில் இருந்து அண்ணாமலைக்கு வருகிறார்;வந்து தாம் ஸ்தாபித்த குபேரலிங்கத்திற்கு ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்;பிறகு அங்கிருந்து கிரிவலம் புறப்படுகிறார்;

(தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளையே தேய்பிறை சிவராத்திரி என்று நாம் பல கோடி ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்)

இந்த வருடம் 5.12.2018 புதன்கிழமை மதியம் 12.47 முதல் 6.12.2018 வியாழக்கிழமை மதியம் 12.41 வரை அமைந்திருக்கின்றது;
 

5.12.2018 புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள்  அண்ணாமலை குபேரலிங்கத்திற்கு குபேரன் பூஜை செய்வார்;

     மாலை 5 மணி முதல் 5.30 க்குள் அங்கிருந்து கிரிவலம் புறப்படுவார்;

நாமும் 5.12.2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் இடத்தில் இருந்து 1 சதுர கி மீ பரப்பளவுக்குள் இருக்க வேண்டும்;அந்த ஒரு மணி நேரம் வரை  குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து நமது கோரிக்கைகளை நினைத்து குபேரலிங்கத்திடம் வேண்டிக்கொள்ள வேண்டும்;மாலை 5 முதல் 5.30க்குள்  அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;

கிரிவலத்தை குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்ய வேண்டும்;பிறகு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து நமது தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்;குபேரலிங்கத்தில் நிறைவு செய்யும் போது,இரவு 11 முதல் 12 மணி ஆகியிருக்கும்;

விடிந்ததும்,வேறு எங்கும் (உறவினர் வீடு,வேறு ஆலயங்கள்) செல்லாமல் நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படி சென்றால் மட்டுமே குபேர கிரிவலம் சென்றமைக்கான முழுப்பலனும் நமக்குக் கிட்டும்;

ஏதாவது ஒரு காரணத்தினால் மேலே கூறிய நேரத்திற்குள் வர இயலாதவர்கள்,6.12.2018 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து வேண்டிக் கொள்ளலாம்;காலை 7 மணி முதல் 7.30க்குள் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.41க்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;

கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்குக்கூட பலவிதமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன;

புதன் கிழமையாக இருப்பதால் பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு வருவது நன்று;

மறுநாள் வியாழக்கிழமை கிரிவலம் வருபவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு வரலாம்;

மழை மற்றும் புயல் காலமாக இருப்பதால்,தகுந்த முன் ஏற்பாடுகளுடன் வருவது நன்று;

வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தரவேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;

பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது;

பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடியிருப்பர்;அவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீருமளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது;

பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் வெகு சிலருக்கு குபேரனின் தரிசனமும் கிடைத்திருக்கிறது;அதனாலேயே.அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றனர்;

இன்றைய கால கட்டத்தில் நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது;

நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்:

அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்;

ஓம் அகத்தீசாய நமஹ!
ஓம் அருணாச்சலாய நமஹ!!!

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU