ப .து. த அவர்களின் சுற்றிக்கை எண் 29945/C1/2015 நாள் 21.06.2015. ன் தமிழாக்கம் ( சுருக்கமாக)
பதிவுச் சட்டம் பிரிவு 22- A (2) ன் கீழான காப்பு வாசகப் படி மனைகள் பதிவு - பற்றி
பத்தி 1: சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்ய தடை பிறப்பிக்கப்பட்ட விபரம்.
பத்தி 2 : பதிவுச் சட்டம் பிரிவு 22 Aன் கீழான அறிவிக்கை (GO Ms.No.123 வணிகவரி மற்றும் பதிவுத் (J 2) துறை நாள் 20.10.2016 வெளியிட்டது.
பத்தி 3 :விற்கப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைகள் / மனைப் பிரிவுகள் பற்றி ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
பத்தி 4 : ஆணை பிறப்பித்த நாளிலிருந்து 3 வாரம் (அ) மறு ஆணை பிறப்பிக்கப்படும் வரை, இதில் எது முந்தையதோ அது வரை அங்கீகரிக்கப்படாத மனைகள் ( ஏற்கனவே மனனயாக பதிவு செய்யப்பட்டிருப்பினும் ) பதிவு செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் W P No 19566/2015 நாள் 21.04. 2017
பத்தி 5 : சென்னை உயர் நீதிமன்ற ஆணை WP No 19566/2015 நாள் 12.05.2017
Para 19: அரசு பதிவுச் சட்டம் பிரிவு 22 A பிறப்பித்தது & அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப் படுத்துதல் தொடர்பான விதிகள் 2017 பிறப்பிக்கப்பட்டது.
Para 20: 09.09.2016 முதல் 28.03. 2017 முடிய மற்றும் 21.04.2017 முதல் 12.05.2017 முடிய அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு செய்யப்பட்டவை சட்டத்தின் பார்வையில் செல்லாதவை என்பதால் மீள பதிவு செய்யக் கூடாது.
Para 23, 24: நீதிமன்ற இறுதி ஆணைக்குட்பட்டது என்பது.
பத்தி 6. : நீதிமன்றத்திடம் தெளிவுரை கோரப் பெற்று வரப் பெற்ற விபரம்.
Para.3: தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைகள் / மனைப் பிரிவுகள் வரன்முறைப் படுத்துதல் விதிகள் 2017 ன் கீழான விதி 15 ( b) _ பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப்படாதவற்றைப் பொறுத்து குறிப்பிடப்படவில்லை.
Para 4: மேற்படி விதி மற்றும் பதிவுச் சட்டம் 22- A ஆகியவை 21.10.2016க்கு முன் பதிவு செய்யப்படாத மனைகளுக்கு பொருந்தாது.
Para 5: 21.10.2016க்கு முன் பதிவான மனைகள் (தடை காலத்தில் பதிவு செய்யப்பட்டவை நீங்கலாக) பதிவு செய்யலாம் . 21.10.2016க்கு முன் பதிவாகாத மனைகளுக்கு விதி 15 B பொருந்தாது.
பத்தி 7: (i).21.10.2016க்கு முன் மனையாகப் பதிவு செய்யப்பட்டவற்றைப் பொறுத்து எந்த ஆவணமும் பதிவு செய்யலாம்
(ii). தடை காலமான 09.09.2016 முதல் 28 - 03.2017 முடிய மற்றும் 21.04.2017 முதல் 12.05.2017 முடிய உள்ள காலத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளைப் பொறுத்து எந்த வகையான தன்மை கொண்ட ஆவணங்களும் பதிவு செய்யக் கூடாது.
(iii).சென்னை உயர் நீதிமன்ற இறுதி ஆணை வரை இது நடைமுறையிலிருக்கும்.
கோ.செல்வநாதன். மாப(ஓய்வு)