#பொதுவான_செய்தி_ஆனால்_இதுதான்_முக்கிய_செய்தி:
தபால் துறையில் நடக்கும் வட இந்தியர்களின் முறைகேட்டில் பல ஏமாளி தமிழன் வேலை இழந்துள்ளான்.. சமீபத்தில் கூட ஹரியானா கும்பல் தமிழ்நாடு தபால் தேர்வில் எல்லா மாவட்டத்திலும் முதலிடம் அதுவும் தமிழ் ஆங்கிலமே தெரியாமல் இரண்டிலும் முழு மதிப்பெண்.. தற்போது தான் கண்டுபிடித்து வழக்கு போடப்பட்டுள்ளது..
ஏமாளி தமிழர்களே எழுதுங்கள் உங்களுக்கான மத்திய அரசு எல்லா தேர்வுகளையும் TNPSC யே கதி என எல்லாரும் ஒரே குட்டையில் பல இலட்சம் பேர் விழாதீர்கள்.. RRB..SSC..UPSC இங்கு போட்டி இல்லாததால் வட இந்தியன் உன் வேலை வாய்ப்பை உன் கண் முன்னே பறித்து ஹாயாக கால் மேல் கால் போட்டு வாழக்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்..
இதுவரை எழுதாத படித்த என் தம்பி தங்கை இனியாவது உன் கவனத்தை மத்திய அரசு தேர்வுகளில் திருப்பு அது TNPSC யை விட எளிது உன் அறிவுக்கு.. இல்லையேல் ஒரு நாள் எல்லா வட இந்தியனுக்கும் நீ டீ..சமொசா.. பானிபூரி.. பான்மசாலா வாங்கி கொடுக்கும் தூரம் வெகுதொலைவில் இல்லை..
ஒரு மாதத்திற்கு 350 ருபாய் 4G க்கு செலவு பண்ண தயாராக இருக்கும் நீ உன் வாழ்நாள் முழுவதும் 40 ஆயிரம் மேல் சம்பாதிக்க ஒரு 400 அல்லது 500 செலவு பண்ணமாட்டியா.. நீ வேலை வாங்கினால் எனக்கு என்ன இலாபம் இதை ஏன் நான் இவ்வளவு நேரம் பதிவு செய்ய வேண்டும் அதற்காகவாவது மத்திய அரசு தேர்வு பக்கம் கவனத்தை திருப்பு TNPSC யை முதலாவதாகவும் இதையெல்லாம் இரண்டாவது இடமாவது கொடு.. உன் வாழ்க்கையில் நீயே விளக்கேற்று.